பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞானசார தேரருக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைத்திருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொதுபல சேனா அமைப்பு ஈடுபட்டு வந்தது.
ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் தெருக்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், அம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.