இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநயக்கவின் பெயரில் வெளியிடப்பட்ட போலி ட்விட்டர் செய்தி குறித்து சீ.ஐ.டி.யினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் புதிய அமைச்சராக முன்னைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது அமைச்சின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி டுவிட்டர் கணக்கு ஒன்றில் மன்மோகன் சிங் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநயக்கவின் பெயரில் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனடி விசாரணை நடத்தி சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
www.twitter.com/srilankaMFA என்ற போலி டுவிட்டர் கணக்கின் ஊடாகவே இந்த தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது சொந்தப் பேஸ்புக் பக்கம் வேறுநபரால் கையகப்படுத்தப்பட்டு அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.