முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு சித்தாண்டியில் மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் ஆரம்பமாகியுள்ளன.
பட்டிருப்புப் பாலத்தடியிலிருந்தும், சித்தாண்டிச் சந்தியிலிருந்தும் இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பித்த ஊர்வலங்கள் கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதியைச் சென்றடையவுள்ளதாக கூறப்படுகின்றது.
பட்டிருப்பில் ஆரம்பமாகும் ஊர்வலமானது களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஆகிய பகுதிகள் ஊடாகவும் சித்தாண்டியில் இருந்து ஆரம்பமான ஊர்வலமானது வந்தாறுமூலை, கொம்மாதுறை, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை ஆகிய பகுதிகள் ஊடாகவும் சென்று, கல்லடி உப்போடையிலுள்ள மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாமி விபுலானந்தரின் எழுச்சிப் பேரணி ஊர்வலம் ஆரம்பமானதில் இருந்து வீதிகளில், தேவாலையங்கள், பொது இடங்கள்,என பல இடங்களிலும் மக்கள் வரவேற்பு செய்து பேரணிக்கு ஆதரவு வங்கி வருகின்றன. அந்தவைகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயளாளர் வறவேற்க நிற்பதனையும் புகைப்படத்தில் காணலாம்..!
சுவாமி விபுலானந்தர் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் பல விடயங்களை அறியாதவர்களாக உள்ளனர்.
இதன் காரணமாக சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை விசேட தினமாகக் கொண்டு, இளம் சந்ததியினர் மத்தியில் சுவாமி தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.