அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் போது மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு வீதி அதிபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறு சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மாதுவ பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகனத்தில் செல்வோர் அவதானமாக செயற்படுமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு இயக்குநர் சரத் ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.