இந்த உலக இயக்கத்திற்கு மதங்கள் பிரதான காரணம். அதேபோல் எந்த ஒரு மதத்திலும் மத நம்பிக்கையாளர்களும், கடவுள் நம்பிக்கையாளர்களும் இருக்கும் வரை அந்த மதம் வீழ்ச்சியடையாது.
மேலும் அனைத்து மதத்திலும் நாத்திகவாதிகளும் நிறையவே இருக்கும் போது அந்த மதத்தினையும் மனிதர்களையும் முற்று முழுதாக கட்டுப்படுத்திவிடமுடியாது.
உலகை தனிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமாயின் முதலில் மதங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படவேண்டும். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.
அந்த வகையில் உலகை தனிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஓர் மர்மக்குழு செயற்பட்டு வருவதாகவும், உலகின் பிரதான விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இதற்கு துணை போகின்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதற்கான ஓர் திட்டமே பிளூ பீம் (project blue beam) திட்டம் எனப்படுகின்றது. நவீன தொழில் நுட்பம் மூலம் இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரிப்பதே இதன் அடிப்படை.
1994ஆம் ஆண்டு இந்த திட்டம் பற்றி ஊடகவியலாளர் மற்றும் தத்துவவாதியான செர்ஜ் மோனஸ்ட் என்பவர் தகவல் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இன்னுமோர் ஆய்வாளர் இது குறித்த செய்திகளை வெளியிட்டார்.
எனினும் அதன் பின்னர் அவர்கள் இருவரும் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மரணங்கள் கொலை என்ற கோணத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து மதங்களும் தங்கள் கடவுள்கள் வானத்தில் இருந்து வருபவர்களாகவும், நட்சத்திரங்களில், விண்ணில் வசிப்பவர்களுமாகவே நம்புகின்றனர்.
அதே நம்பிக்கையை இப்போது புதிதாக மக்கள் மனதில் விதைப்பது அதில் இருந்து ஓர் தலைமைத்துவத்திற்கு பூமியை கட்டுப்படுத்துவது இதுவே பிளூ பீம் திட்டத்தின் பிரதான சதித்திட்டம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் மிதக்கும் நகரங்கள் வானத்தில் தோன்றியதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து புகைப்படங்களும் காணொளிகளும் கூட வெளிவந்தன. அத்தோடு வானில் பல்வேறு வகையாக உருவங்களும் தோன்றிய செய்திகளும் உண்டு.
2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும் இந்த மிதக்கும் நகரம் தோன்றியது, 2015ஆம் ஆண்டு சீனாவில் இவ்வகை நகரம் வானில் தோன்றியது.
அமெரிக்காவிலும் கூட இதே போன்று ஓர் மிதக்கும் நகரம் தோன்றியது. எனினும் இவை புரளிக்கதைகளாக பலர் கூற வெளிவந்த காணொளிகள் மிதக்கும் நகரங்களை மெய்ப்படுத்தியது.
இதனை ஆய்வு செய்தவர்களில் ஒரு தரப்பினர், இவை வேற்றுக்கிரகவாசிகளின் வருகை எனக் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதன் பின்னர் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி ஒளிப்பிம்பங்களாக உருவாக்கப்பட்டதே இத்தகைய தோற்றங்கள் என ஒத்துக்கொள்ளப்பட்டன.
மேலும் இவை நாசாவின் உதவியோடு உலகை ஆள நினைக்கும் மர்மக் குழுவினால் செயற்படுத்தப்பட்டுவரும் சதி. இதன் மூலம் புது மதக் கொள்கை ஒன்றினை உருவாக்கத் திட்டம் தீட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
பலவருடங்களாக நேர்த்தியாக இதற்காக திட்டம் தீட்டப்பட்டு இந்த சதி நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும். உலகை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இதனையே பிரதான திட்டமாக இரகசியமாக செய்துகொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து மேற்குலக ஊடகங்கள் பல செய்திகளை வெளிப்படுத்தினாலும், இந்த சதி பற்றி தகவல்கள் கூறும் ஆய்வாளர்களின் மர்ம மரணங்கள் காரணமாக அச்சங்களும் உள்ளதாக கூறப்படுகின்றது.