பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபராக கூறப்படும் ஞானசார தேரர் குற்றமற்றவர், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஞானசார தேரர் விடயத்தில் அரசு மனித உரிமைகளை மீறுவதாகவும் பொதுபலனோ அமைப்பினர் இன்று கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மேலும், இது வரையில் ஞானசார தேரரை கைது செய்வதற்கான உத்தரவுகளோ, தகுந்த காரணங்களோ கூறப்படவில்லை. நேற்றே அதற்கான சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
ஞானசார தேரர் விடயத்தில் அரசு மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகளைச் செய்துள்ளது. அதேபோன்று தேரரை கடத்தவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே அவரைக் காப்பாற்றுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதேவேளை பொலிஸாரினை பயன்படுத்தி இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமது அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.
ஆட்சியின் குப்பைகளை வெளிப்படுத்தும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டு வருகின்றது. பொலிஸாரை வைத்துக் கொண்டு அரசு நாடகமாடிக் கொண்டு வருகின்றது.
இனி வரும் காலங்களில் பொலிஸ் ஆட்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளது அதனையும் முற்றாக எதிர்க்கின்றோம் எனவும் பொதுபலசோனா தெரிவித்துள்ளது.