பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.