பிரித்தானியாவில் இடி மழையுடன் காலநிலை ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கடும் வெப்ப நிலை நிலவுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்பார்க்கப்படும் பாரிய இடியுடன் கூடிய மழைக்கு முன்னர் வரலாற்று வெப்ப நிலை ஒன்று 176 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளது.
176 வருடங்களுக்கு முன்னர் 32.8 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில் தற்போது 30 செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதற்கமைய வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அந்த வெப்ப நிலையை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த அதி கூடிய வெப்ப நிலை 1922ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி லண்டனில் உள்ள Camden Square, பகுதியிலும், 1944ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி லண்டனின் Horsham, West Sussex, Tunbridge Wells, Kent, and Regent’s Park பகுதிகளிலும் பதிவாகியுள்ளது. 1841ஆம் ஆண்டின் அறிக்கைகளுக்கமைய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் 28 செல்சியஸாகவும், Phuket, தாய்லாந்தின் வெப்பநிலை 27 செல்சியஸாக பதிவாகியுள்ளது.
எனினும் பிரித்தானியாவில் 29 செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.