நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகப்டர் ஒன்று காலி, நெழுவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக பெல் 212 மற்றும் எம்.ஐ – 17 ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலி நெலுவ பகுதியில் மீட்பு பணிக்காக சென்றிருந்த MI27 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மீட்பு பணியாளர் ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தில் விழுந்த குறித்த நபர் உட்பட, வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.