ஆடம்பரமாக இருக்கும் எல்லாவற்றையுமே நாம் பிரமிப்புடன் ரசிப்பதுண்டு. அப்படிப்பட்ட, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிறைய ஆச்சரியங்களையும் வசதிகளையும் கொண்ட ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் உலகம் முழுவதிலும் உண்டு.
அவற்றில் முன்னணியில் உள்ள ஹோட்டல்கள் எவையெவை என்று கணக்கெடுத்ததில், உலகின் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் துபாய் மட்டுமே மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறது.
புர்ஜ் அல் அரபி ஹோட்டல், துபாய்
இந்த ஓட்டலின் சிறப்பே இது அமைந்திருக்கிற இடம் தான். ஆம். இந்த ஹோட்டலை கட்டுவதற்காகவே செயற்கையாக ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாள் இரவுக்கு மட்டும் 18, 716 டாலர்கள் கட்டணமாக வலிக்கப்படுகின்றன.
இதில் மொத்தம் 202 அறைகள் உண்டு. துபாய் நகரிலிருந்து இங்கு ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்களில் செல்ல முடியும். இந்த ஹோட்டல் நிறுவனமே துபாயைச் சுற்றிப் பார்க்க, தனி ஹெலிகாப்டர் சேவையை வழங்குகிறது.
தி பென்டாமினியம், துபாய்
துபாயில் உள்ள மிக முக்கிய கட்டிடங்களில் ஒன்று இந்த பென்டாமினியம். இதற்குள்ளேயே பல அபார்மண்ட் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. விருந்தினர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, சொகுசாகத் தங்க வைத்திருக்கும் உலகின் தலைசிறந்த ஹோட்டல்களில் இதுவும் ஒன்று.
பன்கு பிளாசா, பெய்ஜிங்
உலகின் சிறந்த 7 நட்சத்திர ஹோட்டல்களில் மிகவும் புகழ் பெற்றது பெய்ஜிங்கில் உள்ள பான்கு பிளாசா. உலகின் சிறந்த ஹோட்டலான இது ஜப்பானியர்களால் நடத்தப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த பட்லர் வசதியும் வாகன வசதிகளையும் கொண்டது. இங்கு நீச்சல் குளத்துக்குள்ளேயே மிதக்கும் பார் வசதியும் உண்டு. பெய்ஜிங் செல்லும்போது, பில் ஹேட்ஸ் இந்த ஹோட்டலில் தான் தங்குவாராம்.
ஐ ஸ்கொயர் ஹோட்டல் அண்ட் மால், ஒர்லாண்டோ
இன்னும் திறக்கப்படாத இந்த ஹோட்டல் உலகின் பிரபல ஹோட்டல்களில் ஒன்றாக இருக்கிறதென்றால் அதன் ஆச்சரியத்துக்குரிய விஷயம் தான். 2017 திறக்கப்பட உள்ள இந்த ஹோட்டலில் 1256 அறைகள் உள்ளன.
இந்த ஹோட்டல் கிட்டதட்ட 400 மில்லியன் கோடி டாலர் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு 12,000 டாலார்கள் கட்டணமாம்.