மென்செஸ்டர் தற்கொலைபடை தாக்குதலில் தனது ஸ்மார்ட்போனால் ஒரு பெண் உயிர் பிழைத்துள்ளார்.
கடந்த திங்களன்று இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து மென்செஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த சம்பவத்தின் போது தனது ஸ்மார்ட் போனால் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற போது, லிசா என்பவர் தனது ஸ்மார்ட்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது இரும்பு துண்டு சிதறி லிசாவின் மீது விழுந்துள்ளது. ஆனால் இவர் ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்ததால், அந்த இரும்பு துண்டானது செல்போனின் மீது பட்டது. லிசாவை நேரடியாக தாக்கவில்லை.
மாறாக அவரது காது, மூக்கு, கன்னம்போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
அந்த இரும்புத்துண்டு லிசாவை நேரடியாக தாக்கியிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது ஸ்மார்ட்போன் ஐபோன் என்பது குறிப்பிடத்தது.