கடந்த திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக அந்த நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மென்செஸ்டர் அரினாவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிகழ்வில் சுமார் 21000 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மென்செஸ்டரில் நடைபெற்றது.
இதன்போது உணர்வுபூர்வமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுவொன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த வயோதிப பெண்ணொருவருக்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆறுத்தல் சொல்லும் காட்சி சர்வதேச ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
Sadiq Patel என்ற முஸ்லிம் இனத்தவர் Renee Rachel Black என்ற வயோதி பெண்ணுக்கு இவ்வாறு ஆறுதல் கூறியுள்ளார்.
குறித்த வயோதிப பெண் எழும்ப முடியாமல் தவித்த போதும், அவரின் தோளினை பிடித்து, எழும்புவதற்கும் முஸ்லிம் நபர் உதவி செய்துள்ளார்.
நகரின் ஒற்றுமைக்கு அடையாளமான மான்செஸ்டர் மையத்தில் வயோதிப பெண்ணுடன் இணைந்து முஸ்லிம் நபரும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மென்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் 22 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.