கிரேக்க நாட்டின் முன்னாள் பிரதமர் லூக்காஸ் பபெடெமோஸ் குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார்.
கிரேக்க தலைநகர் ஏதென்ஸிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது முகவரிக்கு வந்த பார்சல் ஒன்றை காருக்குள் வைத்து பிரித்த நேரம் குண்டுவெடித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் லூக்காஸ் பபெடெமோஸ், அவரின் பாதுகாவலர், கார் ஓட்டுநர் என காருக்குள் இருந்த மூன்று பேரும் காயமடைந்துள்ளனர்.
மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. தலைமறைவாக இயங்கும் இடதுசாரி இயக்கம் ஒன்று, இதற்கு முன்னரும் பல குண்டுப் பார்சல்களை அனுப்பியுள்ளது நினைவுக்கூரத்தக்கது.