பற்றி எரிந்தது ஈழம்…..!
பிளாசிற் பொருட்கள் எரித்தால்
சுற்றுச் சூழல் கெட்டுவிடும்
அறிகிறோம் அறிகிறோம்.
அதனை தடுக்கவும் முயல்கிறோம்.
ஈழம் பற்றி எரிந்த போது
ஈமா இல்லாத மனிதனே
ஈழத்தில் வாழ்ந்தவர்
தமிழினம் என்றோடா
இரக்கம் இன்றி
குண்டுகளை ஏவினாய்?…
குப்பை மேடு சரிந்த போது
பாராளுமன்றத்தின் பந்தியில்
முன்னின்று பேசிய மானிடரே…
சந்திக்கு சந்தி மாய்ந்த எம் உறவை
சிந்திக்க மறந்தது ஏனடா?
கண்டி வீதியில் முந்திச் சென்ற
மந்தியென நினைத்தாயோ
எம்மினத்தை?
தெருவுக்கு தெருவாக
சிலைவைத்து பெருமைபேசி
அணியாக கூடிநின்று
புத்தம் புது மாலை சூடி
எம் சிந்தையில் நீ உயர்ந்து
வாக்கு சேர்ந்து
சில்லறை அரசியல் செய்து
பைத்தியம் போன்று பேசுகிறாயே…
பாவப்பட்ட எம்மினம் என்று
பேசும்பொருளானது கொடுமையிலும்
கொடுமை
பிளாசிற்றி பொருளும்
நச்சுக் குண்டுகளும் எம்
இனத்தில் வீசிய போது
சுற்று சூழலும் சுகாதாரமும்
பேசாத சூனியக் காரரே
தமிழனை அழித்து
தாய் நிலம் பறித்து
கரும்புகைக் குண்டுகளால்
ஈழத்தை எரித்து
பசும் பொன் நிலமும்
பாலைவனமானது
பனைமரக் காடும் தரைமட்டமானது
பாற்போர் கலங்க
கொலைக்களமானது எம் ஈழம்
அங்கங்கள் யாவிலும்
குண்டுகள் பட்டு
அடையாளம் தெரியாமல்
அவையங்கள் சிதைந்து
நெஞ்சில் நெருப்பை
நித்தம் நித்தம் சுமந்து
வாழுதடா தமிழினம்
சிங்களம் செய்த வஞ்சகம் என்று
பற்றி எரிகிறது எம் வயிறு நீ
பாடையில் செல்லும் நாள் வரை
யாகம் செய்கின்றோம்
நீ நாசமாக வேண்டுமென்று
தமிழனின் மீது தாண்டவமாடினாய்
தாய்களை எல்லாம்
சேலையை அவிழ்த்தாய்
பெண்ணினம் எல்லாம்
போதையோ உன்மனதில்
களியாட்ட விடுதியில்
கை தட்டிச் சிரித்தாய்
நய வஞ்சக நாவால்
கட்டளைகள் இட்டாய்
உறவுகளைத் தொலைத்து
உயிர்களை இழந்து
உடல்களை புதைக்க
இடங்களும் இன்றி
கரும்புகை; குண்டு மழைக்குள்
கொடும் கொலை செய்தான் சிங்களவன்
கைதட்டி பகை சிரிக்க
பற்றி எரிந்ததடா ஈழம்……!
– தரணி