இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
அந்த வகையில் குறித்த கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இது தவிர, மேலதிகமாக இன்னொரு நிவாரணக் கப்பலும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரையில் 100பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.