உலகின் மிகவும் முக்கிய தொழில்துறை நாடுகளான ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இத்தாலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய அமர்வில் மேற்படி விடயத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன்போது, தீவிரவாத உருவாக்கத்திற்கு எதிராக இணைய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக தீவிரவாத உருவாக்கத்தை தடுப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்று இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தீவிரவாதம் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்வதற்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்படுவதை அனுமதிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் பிரித்தானியாவுடன் இணைந்து ஏனைய நாடுகளும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஜி-7 மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.