இந்திய அரசாங்கத்தினால் யாழ். பொதுநூலகத்திற்கு 60 லட்சம் பெறுமதியான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன.
எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 11.00 இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சிங் இந்த நூல்களை யாழ்.பொதுநூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யவுள்ளார்.
இந்திய மக்களினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு என அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள சுமார் 16 ஆயிரம் நூல்கள் அன்றைய தினம் நன்கொடையாக வழங்கி வைக்கப்படவுள்ளன.
யாழ் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு நூல்கள் இருந்துள்ளதாகவும், மிகச் சிறந்த நூல் தொகுதிகள் உள்ளடக்கிய பழம்பெரும் நூலகமாக
விளங்கியுள்ளதால், மிக அதிகமான நூல்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என இந்திய துணைத்தூதுவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.