தென்பகுதியில் பெய்த கடும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இம்மக்களின் துன்ப துயர நிலைகளுக்கு வடக்கிலிருந்து தென்பகுதிக்கு உறவில் உதவி என்னும் தொனிப்பொருளில் உதவ யாழ்.மாவட்ட மக்கள் முன்வர வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
நல்லெண்ண உதவிக்கு எமது உறவுகள் ஆடைகள், படுக்கை விரிப்புகள், துவாய்கள், சாரம், சேலை, சுகாதாரப் பொருட்கள், சவர்க்காரம், பனடோல், பால்மா வகைகள், மீன் ரின், பிஸ்கட் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட தங்களாலான உதவிகளை வழங்க முன்வாருங்கள்.
உதவிக்கரம் நீட்டும் மக்களுக்கான லொறி பவனி நாளை திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு யாழ்.ஆரியகுளம் சந்தியில் உள்ள சந்நிதி முருகன் கடையில் ஆரம்பித்து யாழ்.நகர முழுவதும் சுற்றிவரும்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, கோண்டாவில், மருதனார் மடம், சுன்னாகம், மானிப்பாய் ஊடாக யாழ் வந்து சேரும்.
மேற்படி லொறி மூலமான மனிதாபிமான உதவியில் உதவிப் பொருடகள் சேகரிப்புத் திட்டத்திற்கு யாழ்.மாவட்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன இதற்கான முழு அனுமதியையும் வழங்கியுள்ளார்.
எனவே யாழ்.குடாநாட்டில் வாழும் அனைத்து மக்களையும் இத்திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி உதவி வழங்கல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஸ்ரீலங்கா சு.க.யாழ்.மாவட்ட அமைப்பாளர் க.கருணாகரனின் தொலைபேசி ஊடாக ( 0777496998 – 0772018275) பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.