அசாம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் நகர விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற சுகோய்-30 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, குறித்த விமானத்தை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த விமானத்தின் கறுப்பு பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த விபத்து சம்பவித்திருந்ததாகவும், சம்பவ இடத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கறுப்பு பெட்டியில் இருக்கும் தகவல்களில் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து விபத்து குறித்து அறிய முடியும் என இராணுவ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் குறித்த எந்தவித தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.