பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பீகாரின் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததுடன், புயல் காரணமாக ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் மணிக்கு 50-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியதாகவும் இதன்காரணமாகவே கட்டடங்கள் இடிந்து வீழந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு குழுவின் கூடுதல் தலைவர் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.