பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டியை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் துபாயில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்கும் முன் மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் விளையாட நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.
அரசின் உத்தரவின்றி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்காது. கிரிக்கெட் உறவு வேண்டுமா அல்லது பயங்கரவாதம் வேண்டுமா என பாகிஸ்தான் முடிவு செய்யட்டும், இது சர்வதேச போட்டிகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் வரும் 4-ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.