இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அவசரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் மரணமடைந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன எனவும் மின்சாரம், தொலைபேசி என்பன துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. எனவே, மக்கள் முகாம்களில் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளான மக்களை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கான நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், உணவு மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளையும் வழங்கிய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கம் சார்பில் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைகள் மாணவர்களுக்கான உடைகள், காலணி, அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொடுக்கவும் மாகாண சபை மூலம் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.