மதச்சார்பற்ற தலைவர்களும், தன்னார்வ அமைப்புகளுக்கு மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்ணூரில் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மகுல்டியும், அவரது ஆதரவாளர்களும் பொது இடத்தில் கன்றுக்குட்டியை பலியிட்டு அதன் தலையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “மதச்சார்பற்ற கொள்கை இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.
இது குறித்து தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் குரல் கொடுத்துவருகின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் கேரளாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு மௌனம் காப்பது ஏன்? மதச்சார்பற்ற தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன்?
அத்துடன் டெல்லி பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் உணர்ச்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் இப்போது மௌனமாக இருப்பது ஏன்?” என அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.