கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு பொலிஸார் தடையுத்தரவை பெற்றிருந்த நிலையில், குறித்த தடையை மீறி காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு சட்டத்தரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரொன்றை கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த மகஜருக்கு உரிய பதில் கிடைக்கும் வரை வீதி மறியல் போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வீதி மறியல் போராட்டம் நடைபெறும் வீதி வழியாக அம்புலன்ஸ் வண்டிகள் மாத்திரம் செல்வதற்கு போராட்டக்காரர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது!