நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் பல்வேறு தரப்பினரும் தாமாக முன்வந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலை தடுப்புக் கைதிகளும் தங்களுடைய ஒரு நேர உணவை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதன்படி சிறைக்கைதிகளின் இன்றைய மதிய உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் ஆறாயிரம் உணவுப் பொதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப் பொதிகளை தயாரிப்பதில் தடுப்புக் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.