காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஏ9 வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மகஜர் ஒன்றை மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் வருகைதந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
“எதிர்வரும் 7ஆம் திகதி 5 பேர் கொண்ட குழுவினர் பிரதமரை சந்திப்பதற்கு அழைத்துள்ளார். எனினும் தமக்கு பிரதமருடனான சந்திப்பு வேண்டாம், ஜனாதிபதியுடனேயே சந்திக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து குறித்த கோரிக்கையை உரிய இடத்தில் தெரிவிப்பதாக கூறி மேலதிக அரசாங்க அதிபர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.
மேலும் போராட்ட இடத்திற்கு வடமாகாண ஆளுநர் வருகைத்தரவுள்ளார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.