அரச பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை குறைப்பாடு, செவித்திறன் குறைப்பாடு, கை – கால் ஊனமுற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோர் ஆகியோருக்கு தலா ஒரு வீத இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் அந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.