44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அதில் 30 நாடுகள் உடனடியாக தமது உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிணங்க நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கொண்டு அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனரத்தங்களில் பாதிக்கப்பட்ட சகலருக்கும் வீடுகள் நிர்மாணித்து வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.
இதேவேளை, கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் மீண்டும் அழிவுகளுக்குள்ளாகியுள்ளன.இதனால் பாதிக்கப்படாத இடங்களில் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கென பொருத்தமானதும் இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படாததுமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டே வீடுகள் அமைக்கப்படவுள்ளன.வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய அரசாங்க சுற்றறிக்கை இன்னும் 2, 3, தினங்களில் வெளியிடப்படும்,
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்ச அளவில் நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.