இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் திகதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்விகாரத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இக் கைது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், திருமுருகன் காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
அத்தோடு, சினிமா பிரபலங்களான இயக்குனர் ராஜு முருகன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் திருமுருகன் காந்தியின் கைதானது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.