சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். இந்நிலையில், சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை உற்பத்தி பொருட்களின் வாயிலாக அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய்களை வருமானமாக பெறுகின்றது. எனினும், வருடாந்தம் புகைத்தல் மற்றும் அதுசார்ந்த சுகாதார பிரச்சினைகளால் 25 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும், புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார சிகிச்சைகளுக்காக 142 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இதனால் அரசுக்கு 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, இலங்கையில் 24 சதவீதமான ஆண்களும் 2.3 சதவீதமான பெண்களும் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளதாகவும், 13 வயது முதல் 18 வயதான காலப்பகுதியிலேயே மாணவர்கள் புகைப்பழக்கத்தை பரீட்சித்துப் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு சாசனத்தை அமுலாக்கிய முதலாவது ஆசிய மற்றும் நான்காவது உலக நாடு இலங்கை ஆகும்.
இலங்கையில், பாடசாலைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்றுள் சிகரட் விற்பனையை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரமொன்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்திருந்தார்.
அத்தோடு, சிகரெட்டை தனித்தனியாக விற்பனை செய்வதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது