ஆப்கானில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் ஒன்றாக நேற்றைய தாக்குதல் காணப்படுகின்றது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளதுடன், 400 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாக அரச ஊடக மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்படி தாக்குதலை தாம் முன்னெடுக்கவில்லை என ஆப்கானில் செயற்பட்டுவரும் தலிபான் தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் சபீஹுல்லா முஜாஹீத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி கடுமையாக கண்டித்துள்ளார்.
அரச கட்டடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் என்பன காணப்படும் பகுதியில் நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதலை தொடர்ந்து அப் பகுதியில் ஆப்கான் பொலிஸார், தேசிய பாதுகாப்பு படையினர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.