ஹட்டன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் சேதமடைந்த நிலையில், அங்குள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த 60 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
12 குடும்பங்கள் வசிக்கின்ற குறித்த லயன்குடியிருப்பில் மேலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுகின்ற நிலையில், மக்கள் வெளியேற்றப்பட்டு தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களது வீடுகளிலும், உறவினர்களது வீடுகளிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழையினால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.