பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை இழக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகிவந்த நிலையில், பிரித்தானியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மே தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டியது நானா அல்லது ஜெரமி கோர்பினா என்பதை மக்கள் தீர்ப்பானிப்பார்கள்.
பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பில் நான் திட்டமொன்றை வகுத்த அதேவேளை, வலுவான மற்றும் வளமான பிரித்தானியாவை உருவாக்குவதற்கும் திட்டம் வகுத்துள்ளேன். அந்த திட்டங்களை என்னால் நடைமுறைப்படுத்த முடியும் என நான் எண்ணுகின்றேன். ஏனெனில் பிரித்தானியா மீதும், பிரித்தானிய மக்கள் மீதும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.
மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு முன்னர்வரை நடைபெற்ற ஏழு கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி முன்னணி வகிப்பதாகவும், மே சரிவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பொன்றில் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு 326 பெரும்பான்மை ஆசனங்களை பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் அவர்களுக்கு வெறும் 310 ஆசனங்களே கிடைக்கும் என கருத்து கணிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.