முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போது மாற்றம் செய்யப்படவுள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையிலேயே இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை மறுசீரமைத்து, நிவாரணப் பணிகளுக்கான போதிய நிதியை திரட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக்குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.