யாழ். பொது நூலகம் தீயினால் அழிக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் இன்று காலை யாழ். பொது நூலகம் முன்பாக நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்த நினைவுகூரலில் வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன், கஜதீபன் உட்பட மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இது அழிக்கப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.