பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. எனினும் கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது குறைவடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் காணாமல் போனோரை தேடு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் நாட்களில் அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேனை, சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 203 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 பேர் காணாமல் போயுள்ளனர்.
15 மாவட்டங்களை சேர்ந்த 630080 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.