யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நூல் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், 36 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கட்டடம் இடிக்கப்பட்ட கோரக்காட்சி இன்னும் எம் கண்முன் தோன்றுகின்றது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பண்பாட்டு அழிப்பில் வரலாற்று ரீதியான பல அரிய ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பண்பாட்டு அழிப்பு பின்னர் இன அழிப்பாக உருவெடுத்தது. இவ்வாறாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இந்த நூல் நிலையம் எரிக்கப்பட்ட தினத்தை நாம் காலகாலமாக நினைவுகூருவதுடன், நூலகம் எரிக்கப்பட்டமை வரலாற்று பாடமாக மாணவர்களுக்கு புகட்டப்பட வேண்டும்” என்றும் கூறினார்.