ஐ.நா. பொதுச்சபையின் தற்போதைய தலைவர் பீற்றர் தோமஸின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது அமர்வில் லஜ்காக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சபையின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் என்ற முறையில் 193 உறுப்பினர்களால் லஜ்காக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த லஜ்காக், சமாதானம், இடம்பெயர்வு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விவகாரங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து லஜ்காக்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ், அவருடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
சுலோவாக்கியாவின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சராக பணியாற்றும் லஜ்காக் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரையில் ஐப்பானுக்கான சுலோவாக்கியாவின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.