இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில், மீண்டும் மெரினாவில் புரட்சி ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்த நிலையிலேயே தமிழிசை இவ்வாறு கண்டம் வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை இது குறித்து கருத்து தெரிவிக்கையில், மாடு தங்கள் தெய்வம் எனக்கூறி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டாலின் பசுவதை சட்டத்தை முழுக்க புரிந்துகொண்டுதான் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பசுவதை தடுப்பு சட்டத்தை பலர் அரசியலாக்குவதாக குறிப்பிட்டதோடு, இவ்விகாரத்தில் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காணக் கூடாது என்றும் கூறியுள்ளார்.