அப்துல் ரகுமான் கவிதையின் ஆச்சரியக்குறி
1937 கார்த்திகை 09 – 2017 ஆனி 02
அப்துல் ரகுமான்’ இது வெறும் வார்த்தையல்ல கவிதைகளின் ஆச்சரியக் குறி! தமிழ் இலக்கியப்பரப்பில் குறியீடுகள், படிமங்களால்
கவிதையெனும் கோலம் போட்டவர்.
கருத்தாளம் மிக்க கவிதைகளை எழுதிய ‘கவிக்கோ’ இன்று தனது 80வயதுகளில் காலமாகிவிட்டார் என்பது தமிழ்க் கவிதைப் பரப்பில் ஈடு செய்ய முடியாத இழப்பாக நான் கருதுகிறேன்.
முடிச்சுக்களை அவிழ்த்து குறியீடுகளை தரம்பிரிப்பதனூடாக மட்டுமே கவிக்கோவின் கவிதைகளை சுவைக்க முடியும்..
20ம் நூற்றாண்டுக்கு முன்னரைப்பகுதியில் ஏற்பட்ட பிரெஞ்சு இலக்கிய மறுமலற்சியின் ஒரு உச்ச வெளிப்பாடாக கருதப்படுவதுதான் ” சர்ரியலிசம்”
இதை தமிழில் ‘மிகை எதார்த்தவாதம்’ என மொழி பெயர்த்துள்ளார்கள் . மனிதனுடைய ஆழ் மனதிலுள்ள சிந்தனைகளை , கனவு சார் விடையங்களை காட்சிப்படுத்துகிற அல்லது எழுத்துவடிவில் முன்னிலைப்படுத்துகிற ஒரு கோட்பாடாக இது வளற்சியடைந்து வந்துள்ளது.
இக் கோட்பாட்டினடிப்படையில் ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர்தான் ‘ சர்வடோர் டாலி” இன்றளவும் இவருடைய ஓவியங்களில் அதிக ஈர்புள்ளவனாக இருந்து வருகிறேன்.
சரி விடையத்துக்குள் வருவோம் , மேலே குறிப்பிட்ட இந்த சர்ரியலிச கவிதைக்கோட்பாட்டை தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவராக கவிக்கோ முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
புதுக்கவிதைப்பரப்பிலுள்ள படிமங்கள் , குறியீடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்காக முனைவர் பட்டம் பெற்றவர்தான் பேராசிரியர் அப்துல் ரகுமான் என்பதும் குறிப்பிடத் தக்கது
. ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
அப்துல் ரகுமான் ஒரு உன்னத கவிஞனாக தனது கடைமைகளை செய்திருக்கிறார்.
அவர் மறைந்தாலும் அவர்தம் பெருமையை கூறுகிற பல்வேறு இலக்கியப்படைப்புக்களை எமக்காக விட்டுச்சென்றிறுக்கிறார் அவற்றையும் உங்களுக்காக பட்டியல் படுத்துகிறேன்
அன்னவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துக்கொள்வோமாக..
படைப்புகள்
01 1974 பால்வீதி கவிதை
02 1978 நேயர் விருப்பம் கவிதை
03 1985 கரைகளே நதியாவதில்லை கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
04 1986 அவளுக்கு நிலா என்று பெயர் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
05 1986 முட்டைவாசிகள் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
06 1986 மரணம் முற்றுப்புள்ளி அல்ல கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
07 1987 விலங்குகள் இல்லாத கவிதை கட்டுரை
08 1987 சொந்தச் சிறைகள் வசன கவிதை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
09 1989 புதுக்கவிதையில் குறியீடு ஆய்வு முனைவர் பட்ட ஆய்வேடு
10 1989 சுட்டுவிரல் பாடல் முத்தாரத்தில் வெளிவந்த தொடர்
11 1990 கம்பனின் அரசியல் கோட்பாடு ஆய்வு அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
12 1995 ஆலாபனை கவிதை சாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர்.
13 1998 பித்தன் கவிதை குங்குமத்தில் வெளிவந்த தொடர்
14 1998 விதைபோல் விழுந்தவன் கவியரங்கக் கவிதைகள் அண்ணா கவியரங்கக் கவிதைகள்
15 1998 முத்தமிழின் முகவரி கவியரங்கக் கவிதைகள் மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
16 1999 பூப்படைந்த சபதம் கட்டுரை
17 1999 தொலைப்பேசிக் கண்ணீர் கட்டுரை
18 2003 காற்று என் மனைவி கட்டுரை
19 2003 உறங்கும் அழகி கட்டுரை
20 2003 நெருப்பை அணைக்கும் நெருப்பு கட்டுரை
21 2003 பசி எந்தச் சாதி கட்டுரை
22 2003 நிலவிலிருந்து வந்தவன் கட்டுரை
23 2003 கடவுளின் முகவரி கட்டுரை
24 2003 முத்தங்கள் ஓய்வதில்லை கட்டுரை
25 2004 காக்கைச் சோறு கட்டுரை
26 2004 சோதிமிகு நவகவிதை கட்டுரை
27 2004 மின்மினிகளால் ஒரு கடிதம் கவிதை கஜல் கவிதைகள்
28 2005 தாகூரின் ‘சித்ரா’ மொழிபெயர்ப்பு
29 2005 ரகசிய பூ கவிதை
30 2005 சிலந்தியின் வீடு கட்டுரை
31 2005 இது சிறகுகளின் நேரம் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
32 2006 இல்லையிலும் இருக்கிறான் கட்டுரை
33 2006 பறவையின் பாதை கவிதை
34 2007 இறந்ததால் பிறந்தவன் கவியரங்க கவிதை முதல் தொகுதி
35 2008 தட்டாதே திறந்திருக்கிறது கட்டுரை
36 2010 எம்மொழி செம்மொழி கட்டுரை
37 2010 பூக்காலம் கட்டுரை
38 2011 தேவகானம் கவிதை
39 கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை கவிதை
40 2013 பாலை நிலா கவிதை
1 1986 கவியரசர் பாரிவிழா விருது குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது
2 1989 தமிழன்னை விருது -தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் – இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது
3 1989 பாரதிதாசன் விருது -தமிழக அரசு
4 1989 கலைமாமணி விருது – தமிழக அரசு
5 1992 அக்ஷர விருது – அக்னி
6 1996 சிற்பி அறக்கட்டளை விருது- கவிஞர் சிற்பி அறக்கட்டளை
7 1997 கலைஞர் விருது தி. மு,க. ஒரு இலட்சம் ரூபாய்
8 1998 ராணா இலக்கிய விருது
9 1999 சாகித்ய அகாடமி விருது- சாகித்ய அகாடமி, டெல்லி – ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது
10 2006 கம்ப காவலர் – கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
11 2007 பொதிகை விருது- பொதிகை தொலைக்காட்சி, சென்னை
12 2007 கம்பர் விருது- கம்பன் கழகம், சென்னை
13 2007 சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு தினத்தந்தி நாளிதழ் – ஒரு இலட்சம் ரூபாய்
14 2008 உமறு புலவர் விருது ஒரு இலட்சம் ரூபாய்
நன்றி