சமகால நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, தெற்கில் சில சிங்கள கடும்போக்காளர்கள் இதனை சீா்குலைக்கப் பார்ப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு இன, மத, கட்சி வேறுபாடு இன்றி ஒத்துழைப்பு வழங்குமாறு நான் அனைத்து அரச மற்றும் தனியார் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படடுள்ளது. அனைத்து மக்களினதும் கருத்துக்களை உள்வாங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிரிவினை ஊடாக நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. பொது மக்களுக்கு உண்மையை ஊடகங்கள் கூற வேண்டும். பூகோள ரீதியிலான நன்மைகளைப்பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும்’ என கூறினார்