பெரிய மாணிக்கவத்தை தோட்டம் இரண்டாம் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் தற்போது குறித்த தோட்டத்தில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த குடியிருப்பு தொகுதியின் பின் புறத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேலும் இரண்டு வீடுகளுக்கு மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் இவ்வாறு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள் இணைந்து வழங்கி வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.