ரஷியா செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு’ கூட்டம் நேற்று நடைபெற்றது. இதல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் உலகின் பழமையான நாகரிகம் கொண்ட இந்தியா முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்து வரும் இந்தியாவை நோக்கிய தனது அரசின் பயணம் உட்கட்டமைப்புக்கள், வேளாண்மை உற்பத்தி போன்ற சேவைகளின் மீது முதலீடுகளை செலுத்த விரும்புகிறது என அவர் கூறினார்.
மேலும், 50 பிரதான நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும், 500 நகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் வசதிகளும் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, சுற்றுலா, உணவகங்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி போன்ற துறைகளிலும் இந்தியாவில் நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.