வைத்தியர்களின் அறிவுரைகளின் பிரகாரம் யாரும் அவரை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி அவரது வீட்டிற்கு இன்று (சனிக்கிழமை) சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த கனிமொழி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி உடல் நலம் குணமடைந்து நல்ல நிலையில் உள்ளதாகவும் விரைவில் அவர் வெளியில் வந்து கட்சி தொண்டர்களை சந்திப்பார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று மாலை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என தான் நம்புவதாகவும் ஒரு சில தலைவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுக் கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் கருணாநிதியை சந்திப்பது குறித்து பின்னர் தான் அறிவிக்கப்படும் எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.