புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற குறித்த பரீட்சாத்த நடவடிக்கையில் தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கலந்து கொண்டன.
மின்னணு இயந்திர வாக்குப் பதிவின் மூலம் குளறுபடி செய்யமுடியும் எனவும் ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கமைய, இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.