42 படகுகள் விடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச கடல் எல்லையை தாண்டும் தமிழக மீனவர் படகுகள் தொடர்ந்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளதாக இந்தியா டுடே தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தடுப்பில் 143 தமிழக மீனவர் படகுகள் உள்ளன.
இந்த நிலையில், தடுப்பிலுள்ள சில படகுகள் (42) விடுவிக்கப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்பால் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும், இந்து சமுத்திரத்தில் தமக்கு பாதுகாப்பு தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறை தாம் கடலுக்குச் செல்லும்போதும், தமது உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ள நிலையிலேயே செல்வதாகவும், எனவே, தமது பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் தடுப்பிலுள்ள மேலும் 101 மீனவர் படகுகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றுமொரு மீனவர் சங்கத் தலைவரான ஜேசுராஜ் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.