இத்தாலியில் சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் கூடியிருந்த வேளையில், பட்டாசுகள் ரசிகர்களை நோக்கி வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடியதில் ஏராளமானோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் Real Madrid அணி 4-1 என்ற கணக்கில் கோல் அடித்து கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டியை காண்பதற்கு Juventus அணி ரசிகர்கள் இத்தாலியில் உள்ள Turin என்ற பகுதியில் அமைந்துள்ள Piazza San Carlo பகுதியில் கூடியுள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியுள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள பெரிய திரையில் இப்போட்டி நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.
போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பட்டாசை கொளுத்தியுள்ளனர்.
வெடித்துக் கொண்டிருந்த பட்டாசுகள் திடீரென்று போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் வந்து வெடித்ததால், அங்கிருந்த ரசிகர்கள் வெடி குண்டு வெடித்து விட்டது என்று எண்ணி பீதியில் ஓடியுள்ளனர்.
ஒரே நேரத்தில் அனைவரும் ஓடியதால், கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் கொண்டதுடன், ஏராளமானோர் கீழே விழந்தனர். இதனால் பலருக்கு இரத்தக்காயங்கள் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கிக் கொண்ட பலர் அதில் இருந்து மீண்ட பின் இரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு சிலர் இரத்தக் காயங்களுடன் ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.