இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நடந்துள்ள தீவிரவாதிகளின் தாக்குதலால் போட்டி தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள பாலத்தின் மீது நடந்து சென்ற பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று நேற்றிரவு மோதியது.
அதேசமயம், இன்னொரு பகுதியில் வேனிலிருந்து பாய்ந்த மர்ம நபர்கள் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர்.
இந்த தாக்குதலில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈடுபட்ட மூன்று கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.
மேலும், இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிர்மிங்காம் நகரில் இன்று நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல், இன்று நடைபெறும் போட்டிக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பிர்மிங்காம் நகரில் திட்டமிட்டபடி இன்று சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போட்டி நடைபெறுவது பிர்மிங்காம் நகராக இருந்தாலும் கூட அந்த நகரம் இருக்கும் பிரித்தானியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதால் போட்டிக்கும் மிரட்டல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனினும் போட்டி ரத்தாவது குறித்து ஐசிசி இதுவரை தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இதனால் திட்டமிட்டபடி மைதானத்தில் பலத்த பாதுகாப்புடன் போட்டி நடைபெறும் என தெரிகிறது.