சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.
இவ்வாறு உதவி வழங்கும் நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பொருட்களாக உதவிகளை வழங்காது பணமாக வழங்குமாறு கோரியுள்ளது. இந்த நிதி உதவிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீடுகளை அமைத்து கொள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் ரூபா பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீளவும் வீடுகளை அமைத்துக் கொடுக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 800 வீடுகளை அமைக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.