டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியேயுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் வாகனம் ஒன்று பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்களை மோதியதை தொடர்ந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தன்னுடைய கண்டத்தை வெளியிட்டுள்ளார்.